சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உதவுமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மீனவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.