மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், Emirates விமான நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
துபாய்க்கு மற்றும் துபாயிலிருந்து இயக்கப்படும் அனைத்து திட்டமிடப்பட்ட எமிரேட்ஸ் விமானங்களும் மார்ச் 7 ஆம் தேதி இரவு 11:59 மணி (UAE நேரம்) வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறைந்த அளவிலான சில விமானச் சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும், அவற்றில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
துபாயில் இணைப்பு விமானம் மூலம் பயணம் செய்பவர்கள், அவர்களின் இணைப்பு விமானம் செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எமிரேட்ஸ் நிறுவனத்திடமிருந்து நேரடியாக தகவல் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு இல்லாவிட்டால், விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலையைக் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப செயல்பாட்டு அட்டவணை மாற்றப்படும் என்றும், சமீபத்திய புதுப்பிப்புகள் emirates.com இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மார்ச் 27 ஆம் தேதி அல்லது அதற்கு முன் பயணம் செய்யும் வகையில் மாற்று விமானத்தில் முன்பதிவு செய்யலாம்.எனவும்
பயண முகமை மூலம் முன்பதிவு செய்திருந்தால் அவர்களைத் தொடர்புகொள்ளவும் எனவும் . நேரடியாக எமிரேட்ஸில் முன்பதிவு செய்திருந்தால், நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும் எனவும் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
பணத்தைத் திரும்பப் பெறுதல்:
மார்ச் 12 ஆம் தேதி அல்லது அதற்கு முன் முன்பதிவு செய்திருந்தால், பணத்தைத் திரும்பப் பெற கோரிக்கை செய்யலாம்.
பயண முகமை மூலம் முன்பதிவு செய்திருந்தால், அவர்களைத் தொடர்புகொள்ள வேண்டும்.
புதுப்பிப்புகளைப் பெற, “Manage Your Booking” பகுதியில் தங்கள் தொடர்பு விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அறிவிப்பு வரும் வரை, துபாய் முழுவதும் உள்ள அனைத்து நகர சோதனைச் சாவடிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எமிரேட்ஸ் நிறுவனத்தின் மிக உயர்ந்த முன்னுரிமை எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
