புத்தளம் கருகப்பன பகுதியில் சட்டவிரோதமான முறையில் 1165 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பீடி இலைகளை கடற்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன், சுமார் 5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடையது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இது தொடர்பிலான விசாரணைகளை மதுவரி திணைக்களம் மேற்க்கொண்டு வருகின்றது.
