Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மின்விளக்குகள் பொருத்த அதிகளவான கட்டணம் அறவிடப்படும் அவல நிலை….

மார்ச் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபை கட்டணம் அறவிட்டால், மின்கம்பங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் கட்டணம் அறவிட வேண்டியிருக்கும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

அதன் போது, வீதி மின்விளக்குகள் பொருத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி அதன் ஊடாக அமைச்சரவைப் பத்திரம் சமர்பிப்பதற்கு ஏதுவாக யோசனைகளை வடக்கு மாகாணத்தின் சார்பில் வழங்குவதற்கு ஆளுநர் கோரினார்.

அதன் போது, இலங்கை மின்சார சபை வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு இடத்துக்கு இடம் அதிகளவான கட்டணத்தை அறவிடுவதாகவும் தற்போது வீதி மின்விளக்குகளின் பாவனைக்கு மின்சாரக் கட்டணத்தையும் கோர முற்படுவதாக உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் தெரிவித்தனர்.

எனவே கடந்த காலங்களைப்போன்று இலவசமாக மின்விளக்குகள் பொருத்துவதற்கு மின்சாரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் குறிப்பிட்டனர்.

அவ்வேளை உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வீதிகளில் இலங்கை மின்சார சபை எந்தவொரு கட்டணமும் இன்றியே மின்கம்பங்களை நடுகை செய்துள்ளதை வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் சுட்டிக்காட்டினார்.

எனவே வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபை கட்டணம் அறவிட்டால், மின்கம்பங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் கட்டணம் அறவிடவேண்டியிருக்கும் என குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கை மின்சார சபையின் ஒப்பந்தகாரர்கள், மின்சார தடங்களுக்கு இடையூறு எனத் தெரிவித்து வீதிகளில் இருக்கும் மரங்களை ஒழுங்குமுறையில்லாமல் வெட்டுவதாகவும், வெட்டும் மரங்களின் குப்பைகளை வீதியில் அப்படியே போட்டுவிட்டுச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இது தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

அதை மேற்கொள்ளுமாறு ஆளுநர் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

முந்தைய செய்தி யாழ் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அடுத்த செய்தி “கண்ணப்பா” திரைப்படத்தின் ரிலீஸ் திகதி விரைவில் அறிவிக்கப்படும்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வு!

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

மே 2, 2025
இலங்கை

ராஜித சேனாரத்னவை கைது செய்யப் பிடியாணை!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு – மூவர் கைது

பிப்ரவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?