இலங்கையில் நீர்வெறுப்பு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர்வெறுப்பு நோயானது நாய்கள், பூனைகள், கீரிப்பிள்ளைகள் மற்றும் அணில்கள் கடிப்பதால் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த நோய் மிகவும் ஆபத்தான நோயாக பரவி வருகின்றது. குறித்த நோயால் மரணம் ஏட்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நோய் தொடர்பில் வைத்திய அதிகாரி தெரிவிக்கையில்,
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பூனை கடி சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதுடன் பூனைக் கடி தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பூனையின் கீறலும் மிகவும் ஆபத்து என்று கூறியுள்ளனர்.
