“இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் தொனிப்பொருளில் சுதந்திர தினமான நாளைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
