Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கசிப்பு வியாபாரியை கைது செய்ய விடாது தடுத்த 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது

ஜனவரி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரியை கைது செய்ய முற்பட்ட பொலிசாரை தாக்கி கசிப்பு வியாபாரியை கைது செய்ய விடாது தடுத்து கைகலப்பில் ஈடுபட்டு வியாபாரியை தப்பி ஓட வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நரிப்புதோட்டம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வீடு ஒன்றை சம்பவ தினமான நேற்று சனிக்கிழமை (17) மாலை 4.30 மணியளவில் பொலிசார் முற்றுகையிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த 62 வயதுடையவரை 180 மில்லி கிராம் கசிப்புடன் கைது செய்து கொண்டு செல்வதற்கு முயற்சித்த போது அவரின் உறவினர்களான பெண்கள் உட்பட்ட குழுவினர் பொலிசாரை தள்ளி வீழ்த்தி தடுத்து கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து வியாபாரி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலையில் பொலிசாருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டதை அடுத்து பொலிசார் அவர்களை வீடியோ படம் எடுத்துவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இந்த நிலையில் பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒருவர் அங்கிருந்து கரடியனாறு பகுதிக்குள் தப்பி ஓடிய நிலையில் அவரை கரடியனாறு பொலிசார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்டு கடமையை செய்ய விடாது தடுத்த மற்றும் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பெண்கள் உட்பட 5 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மன்னார் மாவட்ட செயலாளராக டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு
அடுத்த செய்தி நாட்டில் 882 சந்தேக நபர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் 1000 மில்லியன் ரூபா செலவில் 887 கிராமிய பாலங்கள்

ஜூலை 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் வாடகை வாகனம் பயன்படுத்திய விவகாரத்தினால் சர்ச்சை

மே 8, 2026
இலங்கை

வவுனியாவில் கருநிலம் கவனயீர்ப்பு போராட்டம்

ஆகஸ்ட் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?