நாட்டில் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 882 சந்தேக நபர்கள் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை முன்னெடுப்பு திட்டமானது “முடு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதாகும்.
இதன்படி சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 09 சந்தேக நபர்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஒருவர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது 400 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 11 கிராம் ஐஸ் மற்றும் 500 கிராம் கொக்கைன் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
