கியூபெக் நகரில் வார இறுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், 44 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த நபர் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலை நடந்த இடத்திற்கு அருகிலேயே அகமது யாசிர் இஸ்மைலி அலாய் (Ahmed Yassir Ismaili Alaoui) என்ற வாலிபரைப் பொலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அந்த வாலிபர் மீது தற்போது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (Second-degree murder) சுமத்தப்பட்டுள்ளது.
இவர் மீது ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஒருவரைத் தாக்கியமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.


