கியூபெக் மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சென்ட்-அந்தோனி-டி-படுவா’ (Saint-Antoine-de-Padoue) தேவாலயம், மக்கள் பயன்பாட்டிற்காக ஒரு புதிய வடிவம் பெறவுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு போதிய நிதி வசதி இல்லாததாலும், கட்டடப் பாதிப்புகளாலும் மூடப்பட்ட இந்தத் தேவாலயம், இனி இப்பகுதியின் முக்கிய கலை மற்றும் கலாச்சார மையமாக (Cultural Hub) மாற்றப்படவுள்ளது.
இந்தத் தேவாலயத்தைப் புதுப்பிப்பதற்கான முயற்சியில் உள்ளூர் மக்களுடன் கியூபெக் அரசும் கைகோர்த்துள்ளது.
தேவாலயத்தின் கோபுரத்தைச் சீரமைக்க பொதுமக்களிடமிருந்து சுமார் 2.5 லட்சம் கனடிய டொலர் நிதியைத் திரட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள 1.5 லட்சம் டொலர் நிதியை, கியூபெக் மாகாண அரசு வழங்குகின்றது.
இந்தத் தேவாலயத்தின் உரிமை இனி ‘வால்-டெஸ்-மாண்ட்ஸ்’ (Val-des-Monts) நகராட்சியிடம் ஒப்படைக்கப்படும்.
1906-இல் கட்டப்பட்ட இந்தத் தேவாலயம், பல தசாப்தங்களாக பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் பேசும் மக்கள் இணைந்து பயன்படுத்திய ஒரு முக்கிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.


