Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

‘விசமிகள்’ என தெரிவித்தமைக்கு பொதுமக்கள் கண்டனம்(Video)

டிசம்பர் 23, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக ஊடகங்கள் ஊடாக வெளிக் கொண்டு வந்த அந்த பகுதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் விசமிகள் என தெரிவித்த கருத்தை அந்த பகுதி பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாலமீன்மடு கிராம அபிவிருத்தி சங்க கட்டிட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (22) ஊடக மாநாடு இடம்பெற்றது இதன்போது பொதுமக்கள் பொது அமைப்பு பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் 410 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் 85 வீதமானோர் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருவதுடன் கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது 95 வீதமான வீடுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த மாநகர சபை உறுப்பினரின் சிபாரிசுக்கு அமைய 25 பேருக்கு மட்டும் 25 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு முறைகேடு இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியைச் சேர்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் அமிர்தகழி யைச்சேர்ந்த சயந்தன் மற்றும் லைற்கவுஸ் கிளப், கோயில் ஒன்றின் நிர்வாகத்தினர் இணைந்து எமது சங்கங்களின் பிரதிநிதிகளை விசமிகள் என கருத்து தெரிவித்துள்ளனர் இது வன்மையாக கண்டிக்க பட வேண்டும்

அதேவேளை இந்த நிவாரணம் வழங்குவதில் குளறுபடி இடம் பெற்றதை சுட்டிக்காட்டியது பிழையா? 95 வீதமானோர் பாதிக்கப்பட்டிருந்த போதும் வெறும் 25 பேருக்கு மட்டும் நிவாரணம் பணம் வாங்குவது நியாயமா? இந்த குளறுபடியை மூடி மறைப்பதற்காக இவ்வாறு கருத்து தெரிவித்து கிராம மக்களை இரண்டாக பிரிப்பதற்கு மோசடியுடன் தொடர்புபட்டவர்கள் முயற்சித்து வருகின்றனர்

நாங்கள் அனைவரும் இந்த கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருவதுடன் மீனவர் சங்கத்தின் தலைவர் கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்க தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற கிராம சேவகர், பிரையா பொலிஸ் குழு தலைவர், ஓய்வூதிய சங்க தலைவர் உட்பட பல பொது அமைப்புக்களின் நீண்டகாலமாக இருந்து செயல்பட்டு வருகின்ற எங்களை ஒரு அமைப்பையும் சார்ந்தவர்கள் இல்லை விசமிகள் என பொய்களை கூறி இடம்பெற்ற மோசடியை மூடி மறைக்க செயற்பட்டு வருகின்றனர்.

எனவே இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி செயற்பட்டு வரும் எமது கிராமத்தைச் சேர்ந்த சங்கங்களின் பிரதிநிதிகளை விசமிகள் என தெரிவித்துள்ளமை எமது கிராம மக்களையும் இழிவுபடுத்தும் செயல் என்பதுடன் இந்த கருத்தை வன்மையாக கண்டனம் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்
அடுத்த செய்தி மன்னாரில் பண்டிகைக் காலத்தை ஒட்டி சுகாதார துறை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்!

ஜூலை 30, 2025
இலங்கை

தேங்காய்ச்சில் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி.

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்(Video)

பிப்ரவரி 11, 2026
இலங்கை

பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு

டிசம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?