நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு தற்போது 150–200 வரையில் அதிகரித்துள்ளது.
காற்றின் தரத்தில் ஏற்பட்ட இந்த சரிவு, உணர்திறன் மிக்க நபர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளதால், சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அஜித் குணவர்தன் கூறியதன்படி, எல்லைகளுக்கு இடையே காற்று சுழற்சி ஏற்படுவதாலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும், மனித நடவடிக்கைகளும் காற்றின் தரத்தை பாதிக்கின்றன,குறிப்பாக தீ மற்றும் வாகன புகைகள், பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் போன்ற பொருட்களை எரிப்பது ஆகியவை இதற்கான முக்கிய காரணிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

