Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனவரி 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) அவர்களின் இறுதி கிரியைகள் நாளைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் , திருநெல்வேலியில்1931 ஒக்டோபர் பதினைந்தாம் திகதி பிறந்தவர். நீர்கொழும்பில் தங்கொட்டுவ கிராமத்தில் தன் தந்தை வேலை செய்த தென்னை எஸ்ரேட்டில் வளர்ந்தவர். இங்கு அடிநிலை சிங்கள தமிழ் மக்களோடு வாழ்ந்திருக்கிறார்.

ஆங்கிலம், தமிழ், சிங்களம் மூன்று மொழிகளிலும் புலமையுள்ளவர். நுற்றுக்கு மேற்பட்ட சுய ஆக்க நாடகங்களையும் அறுபதிற்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பு நாடகங்களையும் தமிழ்நாடக உலகிற்கு தந்த பேராளுமை.

இவரது ஆற்றலும் ஆளுமையுமே நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்துறை தமிழில் வளர்ச்சியடையக்காரணமாக அமைந்தது.

குழந்தை ம. சண்முகலிங்கம் மாணவர்கள் கற்பதற்காக ஏராளமான ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தனது கருத்துக்களை நாடகத்தினூடாக சொல்வதில் எந்த சமரசத்துக்கும் செல்லாதவர்.

இவரது முக்கியமான நாடகங்களாக மண்சுமந்த மேனியர், எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ, ஆர்கொலோ சதுரர், கூடிவிளையாடு பாப்பா, பஞ்சவர்ணநரியார் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.

இவரது நாடகப்பணியைப் போற்றி கிழக்குப்பல்கலைக்கழகம் இவருக்கு கொளரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

அன்னார் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்படிருந்த நிலையில் தனது 93 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அன்னாரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினம் திங்கட்கிழமை இறுதிகிரிகைகள் இடம்பெறவுள்ளது.

முந்தைய செய்தி வவுனியா நெளுக்குளத்தில் 12 வாகன பற்றரிகளுடன் ஒருவர் கைது.
அடுத்த செய்தி வருமான வரி பரிசோதகர் என யாழில் பணம் பறிப்பு – இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஏதும் நடந்தால் நான் பொறுப்பல்ல – அர்ச்சுனா எச்சரிக்கை!

ஜனவரி 7, 2026
1
இலங்கை

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு…

மார்ச் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 208 சிங்கள தாதியர்கள் புதிதாக நியமனம்…..

மே 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற நபர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?