ஆடவருக்கான கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் தொடர்கிறார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான T 20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய நிலையில், வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்று கொண்டார். இதன் மூலம் T 20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை புள்ளிகளில் அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார்.
அத்துடன், T20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற 8-வது வீரர் என்ற சாதனையை சக்கரவர்த்தி படைத்துள்ளார்.
T20 பந்து வீச்சாளர் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் பட்டியலில்;
பெயர் நாடு புள்ளிகள்
உமர் குல் பாகிஸ்தான் 865
சாமுவேல் பத்ரீ வெஸ்ட் இண்டீஸ் 864
டேனியல் வெட்டோரி நியூசிலாந்து 858
சுனில் நரைன் வெஸ்ட் இண்டீஸ் 832
ரஷித் கான் ஆப்கானிஸ்தான் 828
தப்ரைஸ் ஷம்சி தென்னாப்பிரிக்கா 827
ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் 822
வருண் சக்ரவர்த்தி இந்தியா 818
ஷதாப் கான் பாகிஸ்தான் 811
வனிந்து ஹசரங்கா இலங்கை 809
