மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் முகவரகங்கள், தங்களுக்குத் தாங்களே நிர்ணயித்துக் கொண்ட செயல்திறன் இலக்குகளில் (Performance Targets) பாதி அளவினையே எட்டியுள்ளன.
திறைசேரி சபை (Treasury Board) வெளியிட்டுள்ள 2024-2025 நிதியாண்டுக்கான அறிக்கையின்படி, மத்திய அரசுத் துறைகள் தங்களின் இலக்குகளில் வெறும் 58% இனை மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளன.
இது கடந்த ஆண்டை விடக் குறைவான செயல்திறன் என்று கருதப்படுகின்றது.
மத்திய அரசு அதிக அளவில் நிதியைச் செலவு செய்தாலும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கல் போன்ற முக்கிய துறைகளில், எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்பது இந்தத் தரவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.
சுமார் 89 அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில், பல முக்கிய துறைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதேவேளை, அரச துறைகளின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைவாக இருந்தாலும், சில குறிப்பிட்ட துறைகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.


