இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வரிவிதிக்க பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
இது தொடர்பில் ட்ரம்ப் தெரிவிக்கையில், மலிவான வெளிநாட்டுப் பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்க சந்தையில் இறக்குமதி செய்யப்படும் அரிசியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளன
கனடாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை உரத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார். இதனால், வரிகள் தொடரலாம்” என தெரிவித்தார்
சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அரசமுறை பயணமாக இந்தியாவுக்கு சென்றிருந்தார். அவரின் வருகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
எந்த நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினால் தங்களுக்கு இலாபமாக இருக்குமோ, அங்கிருந்து வாங்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதியின் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்திருந்தது.
இதன் எதிரொலியாகத்தான் இந்தியா மீது தொடர்ந்து அமெரிக்கா வரிவிதிப்புகள் அதிகப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வொஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் அமெரிக்க விவசாயிகளுக்கான 12 பில்லியன் டொலர்களை ட்ரம்ப் விடுவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
