வடக்கு ஜப்பானில் நேற்றையதினம் 7.5 ரிச்டர் அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியிருந்தது. இந்நிலையில் ஜப்பானின் அமோரி மாகாண கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் இவ்வதிர்வு உணரப்பட்டது.
இதன்படி இந்த சக்திவாய்ந்த நில அதிர்வால் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வதிர்வை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
மேலும் அமோரிக்கு தெற்கே, இவாட் மாகாணத்தின் குஜி துறைமுகத்தில் 70 செ.மீ சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில் பிராந்தியத்தின் பிற இடங்களில் 50 செ.மீ வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
