சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 192 பேர் காணாமல் போயுள்ளனர்.
மோசமான வானிலையால் 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான 234 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.


