கியூபெக் மாகாணத்தில் உணவுப் பாதுகாப்பின்மை ஒரு தீவிரமான நிலையை எட்டியுள்ளது. சமீபத்திய 2025 ஆம் ஆண்டுக்கான பசி சார்ந்த கணக்கெடுப்பு (Hunger Count report) அறிக்கையில் வெளிவந்துள்ள தரவுகள், கியூபெக் மாகாணம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை நீடிப்பதையும், நிலைமை மோசமடைந்து வருவதையும் காட்டுகிறது.
வலையமைப்பு ஆனது, முதல் முறையாக மாதத்திற்கு முப்பது இலட்சத்துக்கும் அதிகமான உணவு உதவி கோரிக்கைகளுக்கு பதிலளித்து வருகிறது.
2024 ஆம் ஆண்டைக் காட்டிலும் வேலை செய்யும் குடும்பங்களிடமிருந்து வரும் உணவு உதவி கோரிக்கைகள் 15% அதிகரித்துள்ளது.
வேலை இருந்தும், அடிப்படை மளிகைப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் கணிசமான கியூபெக் மக்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


