மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தலைமன்னார் தொடக்கம் மன்னார் நகர பகுதி வரையிலான பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேலும் நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த நிவாரண பொதியின் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்களாக வழங்கி வைக்கப்பட்டு வருவதோடு, தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் சமைத்த உணவு மற்றும் ஏனைய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த இரு தினங்களாக பெய்த மழையை அடுத்து குளங்கள் பெருக் கெடுத்ததால் மன்னார் மாவட்டம் கடும் பாதிப்புக்களை சந்தித்தது.
இந்த நிலையில் பல கிராமங்களுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டதால் மக்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நிலையில் இம்மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் மற்றும் ஏனைய பொருட்களை அவர்களை சென்றடையும் வகையில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் வழிகாட்டலில் சமாதான தூதரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஷேக் அமானி ஊடாக வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
