கண்டியிலிருந்து ஹந்தானை வழியாக கலஹா செல்லும் பாதை ஐந்தாம் கட்டை பகுதியில் முழுமையாக தாழ் இறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கபரகல, மடுல்கலை, பம்பரல்லை, கோமரை, பெத்தேகமை, நக்கில்ஸ் போன்ற பகுதிகளிலுள்ள தோட்டப்புறங்களின் பல வீதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதோடு போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.மக்கள் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பெரும் பீதியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
