ஒன்டாரியோ மாகாணத்தின் ‘Building Faster Fund’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோடிக்கணக்கான டொலர் நிதியை ஒட்டாவா நகரம், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இழக்க நேரிடும் என்று நகர திட்டமிடல் அதிகாரிகள் கணித்துள்ளனர்.
இந்த நிதியைப் பெறுவதற்கான மாகாணத்தின் வீட்டுவசதி தொடக்க இலக்குகளை (housing start targets) அடைவதில் ஒட்டாவா நகரம் இந்த ஆண்டும் பின்தங்கி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மலிவு விலை வீட்டுவசதித் திட்டங்களுக்கு நிதி அளிப்பதில் இந்த மாகாண நிதி முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆனால், 2026-ஆம் ஆண்டுக்கான நகரின் உத்தேச பட்ஜெட் தயாரிப்பின்போதே, இந்த ‘Building Faster Fund’ நிதி வருவாயை ஒட்டாவா நகர நிர்வாகம் கணக்கில் கொள்ளாமல் தவிர்த்துள்ளது,
நிதி இழப்பை ஒட்டாவா நகர நிர்வாகம் உறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளதை இது காட்டுவதாகக் கூறப்படுகின்றது.
