ஐ.சி.சி .ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்தின் டெரில் மிட்செல் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் இந்த போட்டியில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
அத்துடன், முன்னதாக மூன்றாம் இடத்தில் இருந்த மிட்செல், சதமடித்ததன் மூலம் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதன் காரணமாக ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கும், ஆஃப்கானிஸ்தானின் இஃப்ராஹிம் ஜத்ரான் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
