கியூபெக் நகராட்சி சபை மீது “Burn 24/7 Canada Worship Ministries” என்ற கிறிஸ்தவ வழிபாட்டு அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.
கடந்த கோடைகாலப்பகுதியில், கியூபெக் நகரில் சர்ச்சைக்குரிய அமெரிக்க இசைக்கலைஞர் சீன் ஃபாய்ட் (Sean Feucht) பங்கேற்கவிருந்த இசை நிகழ்ச்சியைக் திடீரென ரத்து செய்தமைக்காகவே, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கியூபெக் நகராட்சி சபை அடிப்படை உரிமைகளை மீறியதாக, அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக நகராட்சி சபைக்கு தாம் செலுத்திய வாடகைத் தொகையைத் திருப்பித் தர வேண்டும் எனவும், தமக்கு இழப்பீடு தர வேண்டும் எனவும் அந்த கிறிஸ்தவ வழிபாட்டு அமைப்பு கோருகின்றது.
அத்துடன், தமது அடிப்படை உரிமை மீறல் ஆனது நியாயமற்றது என்று அறிவிக்குமாறு, நீதித்துறையை இந்த வழக்குக் கோருகிறது.
