வலி தென் மேற்கு பிரதேச சபையால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்குணவு வழங்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக வசதி குறைந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான போசாக்குணவு வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் முதற் கட்டமாக ஆனைக்கோட்டை மற்றும் மானிப்பாய் உப அலுவலகங்களுக்குட்பட்ட பிரதேச பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தவிசாளர், சபையின் செயலாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.


