கியூபெக் அரசாங்கம், மருத்துவர்களின் ஊதியச் சீர்திருத்தச் சட்டமான Bill 2 எனப்படும் மசோதாவின் சர்ச்சைக்குரிய இரண்டு பிரிவுகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஊதியத்தை செயல்திறன் இலக்குகளுடன் இணைக்கும் இந்தச் சட்ட மசோதா,, பரவலான எதிர்ப்பை உருவாக்கியதுடன், ஒரு அமைச்சரின் இராஜினாமாவிற்கும் வழிவகுத்தது.
தன்னுடன் கருத்து முரண்பாடு கொண்டிருக்கும் மருத்துவர் சமூகத்தினரை சமாதானப்படுத்தும் விதமாகவே, கியூபெக் அரசாங்கம் இந்த தற்காலிக நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூபே மற்றும் கருவூலச் சபை தலைவர் பிரான்ஸ்-எலைன் டுரான்சோ ஆகியோர் இணைந்து, இந்தத் தற்காலிக நிறுத்தத்தை அறிவித்தனர்.
குறித்த சட்ட மசோதாவினை நீதிமன்றம் ஊடாக எதிர்த்து வரும் மருத்துவர்களின் கூட்டமைப்புகளைப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப அழைப்பதற்கு இந்த நடவடிக்கை, உதவும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
