Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் இளைஞன் சித்திரவதை சம்பவம்- சந்தேக நபர் கைது!

நவம்பர் 5, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை , தாயின் கண் முன் நிர்வாணமாக்கி , சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 11 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பல தடவைகள் முயன்ற போதிலும் வடமாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளின் தலையீடுகள் காரணமாக கைது செய்ய முடியாத பொலிஸார் இன்றைய தினம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரை சந்தேக நபர் பார்வையிட வந்த வேளை பொலிஸ் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் நாளைய தினம் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பிரதான சந்தேகநபருக்கும் வடமாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்பட்டமையால் , சந்தேகநபரை கைது செய்வதற்கு அதிகாரிகள் தடையேற்றப்படுத்தி வந்தனர் எனவும் , கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்று சிவில் உடையில் , தனியார் ஒருவரின் முச்சக்கர வண்டியில் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸ் குழு சென்ற வேளை சந்தேக நபர் தப்பி சென்றிருந்த நிலையில் , தனியாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் சிவில் உடையில் பொலிஸார் பயணித்தமை தொடர்பில் விசாரணைகள் நடாத்தி பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னணி

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 பேர் வரையில் பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டனர்.

அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

பிரதான சந்தேகநபர் உள்ளிட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிமன்று திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் , பொலிஸார் பிரதான சந்தேகநபரை கைது செய்வதனை கடந்த 11 மாதங்களாக தவிர்த்து வந்தனர். இந்நிலையிலையே இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

முந்தைய செய்தி கியூபெக் மருத்துவர்களின் ஊதியச் சீர்திருத்தச்சட்டத்தை நிறுத்துவதாக அறிவிப்பு!
அடுத்த செய்தி களுத்துறை பகுதியில் பல பெறுமதியான போதை பொருள் மீட்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஓமந்தையில் தடம் புரண்ட புகையிரதம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

இனி உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை-ஹர்ஷ அபேசூரிய!

செப்டம்பர் 27, 2025
இலங்கை

ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களை கையளித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்!

டிசம்பர் 10, 2025
இலங்கை

மட்டக்களப்பில் சிறுமி கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?