Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு…

ஏப்ரல் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் சிஐடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடியே 28 இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (3) பிணையில் விடுவித்துள்ளார்.

மட்டக்களப்பை சேர்ந்த கனடா நாட்டிலுள்ள தனிநபர் ஒருவருடன் இணைந்து இருவரும் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட நிலையில் அந்த வர்த்தகத்திற்கு அவரிடமிருந்து இருந்து 3 கோடி 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்று, அதற்கான வர்த்தக நடவடிக்கை இடம்பெறமால் நிதியை மோசடி செய்தார் என கனடா நாட்டிலுள்ள தனிநபர் கொழும்பிலுள்ள சிஐடி நிதி மோசடி பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த முறைப்பாட்டுக்கு அமைய தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் பாசிக்குடாவில் தனியார்
ஹோட்டலில் இருந்த நிலையில், கொழும்பில் இருந்த வந்த சிஐடி நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று புதன்கிழமை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அருண் தம்பிமுத்து சார்பாக ஆஜராகிய கமேகே தலைமையிலான சட்டத்தரணிகள் இது ஒரு சிவில் வழக்கு வர்த்தகம் தொடர்பானது இதனை நிதி மோசடி என சோடிக்கப்பட்டு முறைப்பாடு செய்துள்ளதாக. வாதங்களை முன்வைத்த நிலையில் நீதவான் அவரை 3 கோடியே 28 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் கொண்ட சரீர பிணையில் விடுவித்து எதிர்வரும் மே மாதம் 8 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி வவுனியாவில் 15 கிலோ கஞ்சா மீட்பு – மூவர் கைது
அடுத்த செய்தி தையிட்டி விவகாரத்துக்கான தீர்வு கலந்துரையாடல்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பயிற்சி நிறைவு

ஜூன் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் அச்சுவேலி தோப்பு பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

ஜூன் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தீபாவளியன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்

அக்டோபர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கனேமுல்ல சஞ்ஜீவ கொலையுடன் தொடர்புடைய 12 பேர் கைது!

ஜூன் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?