ஹாலோவீன் பண்டிகைக்காலத்தில் தென் கியூபெக் பகுதிகளில் மோசமான மற்றும் ஈரப்பதமான வானிலை இருக்கும் என கனடா வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு தென் கியூபெக் பகுதிக்கு கனமழை எச்சரிக்கையை (Rainfall Warning) விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை மாலை வரையில் சுமார் 40 முதல் 60 மில்லிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தென் கியூபெக் பகுதிகளில் பலமான காற்றும் வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
