Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். கோட்டையை சுற்றி எல்லைக்கற்களை நாட்ட தீர்மானம்

அக்டோபர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் கோட்டை வெளிப்புற பகுதியை சுற்றி தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொல்பொருட் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது நிறுத்தப்பட்டிருந்தது.

வீதியோரமாக எல்லை கற்களை நடுகை செய்வதால் , விபத்துக்கள் இடம்பெறும் எனவும் , மாநகர சபையுடன் கலந்துரையாடாது தொல்பொருட்த்திணைக்களம் தன்னிச்சையாக கற்களை நடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், எல்லை கற்கள் நடுகை செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அந்நிலையில் இன்றைய தினம் அது தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் , தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து எஞ்சிய எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாநகர சபையின் பொறியியலாளர், தொல்பொருட் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி ஒன்டாரியோ மாகாண சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
அடுத்த செய்தி யாழ் . போதனா வைத்தியசாலை படுகொலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடையாக வழங்கிய மாலைதீவு!

டிசம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பா.ம. உறுப்பினர் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுப்பு!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு சிரமதானப்பணி முன்னெடுப்பு!

ஜூன் 4, 2025
1
இலங்கை

காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான கலந்துரையாடல்…

ஏப்ரல் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?