Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

ஜூன் 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான புதிய மூன்று மாடி கட்டிடத்தை கட்டி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கையளிப்பதாகவும், புதிய கட்டிடம் கையளிக்கப்படும் போது, புதிய மருத்துவ உபகரணங்களும் , போதிய பணியாளர்களும் வழங்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார அமைச்சர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  “தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பில் ஒரு உறுதியான வாக்குறுதியை அளிக்க விரும்புகிறேன். ஒரு பொறுப்புள்ள அமைச்சு என்ற வகையில், அடுத்த வருடத்திற்குள் இந்த மூன்று மாடிக் கட்டிடத்தை நாங்கள் முழுமையாகக் கட்டி முடிப்போம். அதை எம்மால் செய்ய முடியும்.
இந்தக் கட்டிட வேலைகள் கடந்த காலங்களில் தாமதமானதற்குக் காரணம், இந்த வருடம் வரை இதற்கான முறையான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் (NPD) அனுமதி  கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அந்த அனுமதி எமக்குக் கிடைத்துள்ளது.
இந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் இதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுமானப் பணிகளுக்காக இந்த ஆண்டு சுமார் 70 மில்லியன் ரூபாயை அமைச்சால் ஒதுக்க முடியும்.
 எஞ்சிய தொகையை அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்குவோம். அத்துடன், தற்போது புதிய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான (Procurement) முதற்கட்டப் பணிகளையும் ஆரம்பித்துள்ளோம்.
ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு நீங்கள் தற்போதுள்ள உபகரணங்களைக் கொண்டு பணியாற்ற வேண்டியிருக்கும். ஆனால், புதிய கட்டிடம் அமையும்போது உங்களுக்கு புதிய வசதிகளும் புதிய உபகரணங்களும் தேவை என்பதை நான் அறிவேன். எனவே, அதற்கான கொள்வனவுப் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
அத்துடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் பணியில் 95 வீதம் வரை தற்போது நிறைவடைந்துள்ளது.
எனவே, வரும் அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக இதற்கான அனுமதியைப் பெற்று, புதிய பணியாளர்களை நாம் வேலைக்கு அமர்த்த முடியும்.
ஒட்டுமொத்த சுகாதாரத் துறையிலும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் சில சிரமங்கள் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வட மாகாணத்தில் மட்டுமல்ல, மத்திய அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளிலும் இந்த பணியாளர் பற்றாக்குறை உள்ளது.
  இறுதியாக நான் கூற விரும்புவது, இந்தக் கட்டிடக் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டே ஆரம்பித்து, 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய முயற்சிப்போம் என்ற உறுதியான வாக்குறுதியை வழங்குகிறேன்” என தெரிவித்தார்.
முந்தைய செய்தி கொலம்பியா மாகாண முதல்வர் சீனா பயணம் ; மரவளம் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தை முன்னிலைப்படுத்த திட்டம்
அடுத்த செய்தி கொழும்பு மாநகர சபை விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தொல்லியல் இழுபறியால் கவனிப்பாரற்றிருக்கும் நிலாவரை

ஜனவரி 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மூன்று மாத குழந்தை உயிரிழப்பு

அக்டோபர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

செப்டம்பர் 26, 2025
இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

ஆகஸ்ட் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?