அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் போக்கினை விமர்சிக்கும் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் ஒரு பகுதியாக, மொண்ட்ரீயல் நகரிலும் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
‘சர்வாதிகாரிகள் வேண்டாம்’ என்று பெயரிடப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மொண்ட்ரீயல் வாழ் மக்கள் Place du Canada சதுக்கத்தில் கூடி, ”ஜனநாயகமே பிரதானம்” என்ற செய்தியை உறுதியாகத் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ‘வெளிநாட்டில் உள்ள ஜனநாயகவாதிகள்’ அமைப்பின் கியூபெக் கிளை தலைமை தாங்கியது.
பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) அரசாங்கம் கொண்டு வந்துள்ள ‘வலுவான எல்லைகள் சட்டம்’ (Strong Borders Act) குறித்த தமது எதிர்ப்பை, அந்த கிளையின் தலைவர் ஹேம்லின்-ஷூலென்பர்க் பதிவு செய்தார்.
‘ரேஜிங் கிரானீஸ்’ (Raging Grannies) எனப்படும், நகைச்சுவையான பாடல்கள் மூலம் அமைதி மற்றும் நீதிக்காகப் பிரச்சாரம் செய்யும் மூத்த பெண்களின் குழுவும் இந்தப் பேரணியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.