சபாநாயகர் எழுத்துமூல கோரிக்கை விடுத்து தன்னை பொலிஸ் காவலில் வைக்குமாறு கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் நாடாளுமன்ற அடையாள அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும் அர்ச்சுனா எம்.பி அதனை பெற்றுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸ் போக்குவரத்து சட்டத்தின் கீழ் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பொலிஸாரால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, எனவே அது சாதாரண மனிதர் என்றாலும், எம்.பியாக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவ்வாறே பின்பற்றப்படும். இதில் பாகுபாடு இல்லை என அறிவித்ததுடன், அர்ச்சுனா எம்.பி சபையில் கூறிய சில வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் அறிவித்தார்.