ஜப்பானில் தயாரிக்கப்பட்ட வாயு கைத்துப்பாக்கியை காட்டி ஒருவரை மிரட்டிய சம்பவம் தொடர்பாக அக்குரணை குருகொட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அலவத்துகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பதிவு செய்யப்படாத கெப் ரக வாகனத்தை ஒரு குறுகிய வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது முன்னால் ஒரு வாகனம் வந்ததுள்ளது எனவும்
.அவர் வாகனத்தை பின்னோக்கி எடுக்க மறுத்தபோது
தொழிலதிபர் வண்டியில் இருந்த குறித்த வாயு கைத்துப்பாக்கியை எடுத்து அவரை சுடுவதாக மிரட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
வாயு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட
தொழிலதிபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலகவின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக விசாரணை நடத்தப்படுகிறது.

