வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய திரைப்படம் அரசன். இத் திரைப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப் படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தின் ப்ரமோ வீடியோ இன்று மாலை 06.02 மணியளவில் தியேட்டர்களிலும் நாளை காலை 10.06 மணியளவில் யூடியூப் தளத்திலும் வெளியாகவுள்ளது.
அதன்படி, ப்ரமோ வீடியோ குறித்த்து நடிகர் சிலம்பரசன் பதிவு ஒன்றை அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில்,“வெற்றிமாறன் சாரின் அரசன் ப்ரமோவை தியேட்டர் வெர்ஷனில் மியூசிக்கோடு பார்த்தேன். நான் சொல்றேன், டைம் கிடைச்சா தியேட்டர்ல பாருங்க. தியேட்டரிகல் எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க” எனப் பதிவிட்டுள்ளார்.