கெவின் ரொமாகோசா என்ற கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர், தனது மனைவி ராபின்-கிறிஸ்டில் ஓ’ரெய்லி-யை கொலை செய்த வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓ’ரெய்லியின் உடல், 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், மத்திய கியூபெக் பிராந்தியத்தில் உள்ள விக்காம் (Wickham) என்ற கிராமப்புற சாலையில் கண்டெடுக்கப்பட்டது.
அக்காலப்பகுதியில் கணவன்-மனைவி இருவரும் தம்முடன் தொடர்பில் இல்லாததால், அவர்கள் இருவரின் பாதுகாப்புக் குறித்து கவலை கொண்ட அவர்களது உறவினர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்றபோது, சந்தேக நபராக ரொமாகோசா அங்கேயே வைத்து கைது செய்யப்பட்டார்.
டிரம்மாண்ட்வில்லே (Drummondville) நீதிமன்றத்தில், அவர் மீது கொலை மற்றும் சடலத்தை அவமதித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்தே, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தீர்ப்பு அளிக்கப்பட்டது.