கியூபெக்கில் ஸ்டார்பக்ஸ் கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும், மொன்றியலில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட காருக்கும் தொடர்பு இருக்கலாம் என, மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மொன்றியல் காவல்துறையினர் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில், Rivière-des-Prairies—Pointe-aux-Trembles பகுதியில் எரிந்த நிலையில் ஒரு காரைக் கண்டெடுத்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் Charalambos Theologou என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் நேரடித்தொடர்புடைய முக்கிய நபர் எனக்கூறப்படுகின்றது.
காயமடைந்த இருவரும் இவரது “Chomedey Greeks”– குழுவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த சில நிமிடங்களுக்கு முன், இரு சந்தேக நபர்கள் சாம்பல் நிற செடான் காரில் வருவதும், போவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லாவல் நகர போலீஸ் பிரிவுத் தலைவர் Pierre Brochet, இந்த சம்பவம் “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தெளிவாக தொடர்புடையது” என்று கூறியுள்ளார்.