நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலத்த மின்னலுடன் மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்
செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
