காலி தங்கேதர பகுதி துப்பாக்கி சூட்டோடு தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டோடு தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் காலி பிராந்திய குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 12 கிராம் 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
