கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சீனாவின் முன்னாள் விவசாய மற்றும் கிராமப்புற விவகார அமைச்சர் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2007 முதல் 2024 வரை பல்வேறு பதவிகளை வகித்தபோது, டாங் மொத்தம் 268 மில்லியன் யுவான் (37.6 மில்லியன் அ.டொலர்) கையூட்டல் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதில் பணம் மற்றும் சொத்து ஆகியவை அடங்கும்.
இருப்பினும், அவர் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டதால், மக்கள் நீதிமன்றம் அவரது மரண தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தது.
ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பால் இந்த விவகாரங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்ட பின்னர், பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 2024 இல் டாங் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் வெளியேற்றப்பட்டார்.
மேலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு மற்றும் அவருக்கு முன்னோடியான வெய் ஃபெங்கே மீதும் இதேபோன்ற விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
விவசாயம் மற்றும் கிராமப்புற விவகார அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, டாங் 2017 முதல் 2020 வரை மேற்கு கன்சு மாகாணத்தின் ஆளுநராகவும் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

