Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

போதைப்பொருள் கடத்தல் – சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு!

செப்டம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிங்கப்பூரின், சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வந்த மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்நாட்டின் மத்திய போதைப்பொருள் பிரிவு சி.என்.பி இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, நேற்று வியாழக்கிழமை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 வயதுடைய தட்சிணாமூர்த்தி, சிங்கப்பூருக்கு 44.96 கிராம் diamorphine-னை கடத்தியதாக கடந்த 2011ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டு 2015ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் தம்மீதான குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை மேல்முறையீடு செய்த வேளையில், கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது

அதைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதியே தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், நீதித்துறை சீராய்வு வழக்கு விசாரணையைத் தொடங்க அனுமதிக்கும் வகையில், மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாக அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் மேல் முறையீட்டின் போது சட்ட ஆலோசகர் ஒருவரும் அவருக்கு நியமிக்கப்பட்டதாக, அறிக்கை ஒன்றில் சி.என்.பி கூறியிருந்தது.

மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியிடம் தட்சிணாமூர்த்தி, கருணை மனு தாக்கல் செய்திருந்தபோதும் அது தோல்வியடைந்ததாக சி.என்.பி தெரிவித்தது.

இதேவேளை, எஸ். சாமிநாதன், ஆர்.லிங்கேஸ்வரன், பன்னீர் செல்வம் பரந்தாமன் ஆகிய மூன்று மலேசியர்களும் சிங்கப்பூர் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வருகின்றனர்.

முந்தைய செய்தி வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
அடுத்த செய்தி திஸ்ஸமஹாராமவில் துப்பாக்கி சூடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

வியட்நாமில் வெள்ள பெருக்கு – 9 பேர் உயிரிழப்பு!

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்துசெய்வதற்கான சட்டமூலம் வெளியிடு(video )

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நாட்டை விட்டு தப்பியோடினார் வங்கதேச பிரதமர் !

ஆகஸ்ட் 5, 2024
உலகம்

ரஷ்யாவின் கியேவ் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்த பேச்சுவார்தை!

ஆகஸ்ட் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?