Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சொற்களுக்கு பதிலாக, வடகொரிய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்களிலும் இந்த விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், மேற்கத்திய கலாசாரத்தின் செல்வாக்கு வடகொரிய சமூகத்தில் பரவாமல் தடுப்பதற்கான முயற்சி என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
