அமெரிக்காவில் இராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் பெரும் புள்ளிகளிடம் ஆசிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஹான் லீ என்ற 42 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெரியவந்த தகவலை கொண்டு ஹான் லீ பெடரல் பொலிஸால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் கிளைன்ட்களிடம் சென்று வருவதற்காக ஏர்லைன் மற்றும் தங்குமிட வசதிகள், பெண்கள் கடைபிடிக்கவேண்டிய விதிகள் என மிகவும் அட்வான்ஸ் ஆக இந்த தொழில் நடத்தப்பட்டுள்ளது.