அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்புகள் முக்கிய நகரங்களில்
வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகியோருக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருக்கலைப்பு உரிமை, வீடமைப்பு மற்றும் உணவு செலவு குறைப்பு போன்ற விடயங்களுக்குக் கமலா ஹாரீஸ் முக்கியத்துவம் வழங்கி பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
அதேநேரம் டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பு மற்றும் பாரிய வரி குறைப்பு போன்ற விடயங்களில் உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.
தேர்தல் தினத்துக்கு முன்னதாகவே சுமார் 82 மில்லியன் மக்கள் வாக்குகளைப் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் அமெரிக்கக் காங்கிரஸுக்கான உறுப்பினர்களும் தெரிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.