இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 5.8 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாமின் குவஹாத்தியில் இன்று மாலை 4.41 அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு பங்களாதேஷ், பூட்டான் வரை குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
உயிர் சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


