கனடா பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஐந்து முக்கிய “தேசத்தைக் கட்டியெழுப்பும்” திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க பிரதமர் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளார்.
இந்தத் திட்டங்களில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் மொன்றியல் துறைமுகத்தை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டங்கள், அலுவலகத்தின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் “தேசத்தின் நலனுக்காக” விரைந்து செயல்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஐந்து திட்டங்களைத் தவிர, இன்னும் ஆரம்ப நிலையில் உள்ள மேலும் சில திட்டங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அட்லாண்டிக் கனடாவில் காற்றாலை மின்சாரத்தை ஆதரிக்கும் “விண்ட் வெஸ்ட் அட்லாண்டிக் எனர்ஜி” திட்டம் உள்ளிட்ட அந்த திட்டங்கள், எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
