பிரதமர் மார்க் கார்னி, உக்ரைனின் தலைநகர் கீவ்வுக்கு முதன்முறையாக உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகவே, அவர் அங்கு விஜயம் செய்துள்ளார்.
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்திய கார்னி, அந்நாட்டுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான புதிய இராணுவ உதவிகளை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த இராணுவ உதவியில், 1 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உபகரணங்கள், போர்த்தளவாடங்கள் மற்றும் மேம்பட்ட ட்ரோன்கள் போன்றவை நேட்டோ வழியாக அமெரிக்கா மற்றும் கனடா விநியோகஸ்தர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எனத் தெரிய வருகின்றது.
மீதமுள்ள நிதியானது, உக்ரேனின் ட்ரோன் மற்றும் மின்னணு போர் திறன்களை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதியானது, கனடா மற்றும் உக்ரைன் தொழில்துறைகளுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளில் முதலீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.