நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும்
பாலியல் வன்புணர்வு தொடர்பாக 321 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
சிறுவர்கள் தொடர்பாக கடந்தாண்டு ஆரம்பம் முதல் முடிவு வரை பல்வேறு வகையான முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்றுள்ளன.
இதன்படி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகளும், சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1950 முறைப்பாடுகளும், வீதிகளில் யாசகம் பெறுவது தொடர்பில் 229 முறைப்பாடுகளும் பாலியல் செயலுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பில் 25 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தை திருமணம் தொடர்பில் 14 முறைப்பாடுகளும், சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியிடுவது தொடர்பான முறைப்பாடுகள் 151 பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பொறுத்தவரை ஏராளமான முறைப்பாடுகள் சிறுவர்களோடு தொடர்புபட்டவையாகவே உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.