கியூபெக்கில், சிகுட்டிமி (Chicoutimi) தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 23-ஆம் திகதி நடைபெறும் என முதலமைச்சர் பிரான்சுவா லெகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம், அப்போதைய நகராட்சி விவகாரங்கள் துறை அமைச்சர் ஆண்ட்ரே லாஃபோரெஸ்ட் (Andrée Laforest) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் சாகினே (Saguenay) நகர மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக விலகியதையடுத்து, இந்தத் தொகுதிக்கான ஆசனம் சட்டமன்றத்தில் வெற்றிடமானது.
இதனையடுத்தே, குறித்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு (Advance Polling) பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
