மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியைச் சேர்ந்த அணுமின் நிலையத்தைக் குறிவைத்து யுக்ரைனிய ஆளில்லா வானூர்தி ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஆளில்லா வானூர்தி பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா குறிப்பிடப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வானூர்தி அணுமின் நிலையத்தின் மின்மாற்றியைச் சேதப்படுத்தியுள்ள போதிலும் அணு கதிர்வீச்சு அபாயம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணுசக்தி நடைமுறைக்கு அமைய அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நடைமுறையை இரண்டு தரப்பினரும் பலமுறை மீறி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட இன்றைய தினம் யுக்ரைன் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றது.
கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திடம் இருந்து யுக்ரைன் இன்றைய தினத்திலேயே சுதந்திரத்தைப் பெற்றது.
